06 May 11 Tamil - 2026

திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர்  வைரமுத்து மீது பின்னணிப் பாடகி சின்மயி ஸ்ரீபாதா கூறியுள்ள பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்விட்சர்லாந்துக்கு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது வைரமுத்து தங்கியிருந்த ஓட்டல் ரூமுக்கு தனியாகச் செல்லுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாகவும் சின்மயி குற்றம் சாட்டியிருந்தார்.

சின்மயி கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, தன் மீது அநாகரீகமான அவதூறு பரப்பப் படுவதாக விளக்கம் அளித்தார். இந்நிலையில் சின்மயிக்கு ஆதரவாக பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது. நிச்சயம் விசாரிக்கப் பட வேண்டியது. அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத் துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்??singer accusations merit further investigations Cineworld silent???

ALSO READ:  மதமாற்ற விவாதம் … மீண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending