கவர்னர் பன்வாரிலால் இன்று டெல்லி பயணம்

09 Oct23 Dhin Governer

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 பேர்களை சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்திருந்தார்.

இதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வெளியாக கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியலில் மீண்டும் பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கவர்னர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் 2 நாட்கள் இருக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட நிபுணர்களிடனும் விவாதிப்பார் என தெரிகிறது.

இதனால் தமிழக அரசியல் நிலவரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.