ரயில் தண்டவாளத்தில் நின்று சென்னை வண்டலூர் அருகே வேகமாக வரும் மின்சார ரயில் பின்னணியில் செல்ஃபி எடுக்க முயன்ற மாணவர், அதே ரயில் மோதி பரிதாபமாக பலியானார்.
மாணவர் பலியான சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறியதாவது :-
11 வகுப்பு படிக்கும் “தினேஷ் குமார் என்ற மாணவர் அவரது நண்பருடன் நேற்று (01-02-2016) மாலை வண்டலூர் ரயில் நிலையம் சென்றுள்ளார். அங்கு தினேஷ் குமார் தண்டவாளத்தில் நின்று கொண்டு வேகமாக வரும் மின்சார ரயில் பின்னணியில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது அதே மின்சார ரயில் அவர் மீது பலமாக மோதிச் சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறது என துறையினர் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending