மதுரை வரும் பிரதமருக்கு ‘கறுப்புக் கொடி’ காட்ட நீதிபதி ‘பச்சைக் கொடி’!

சற்றுமுன் மதுரை
madurai high court - 2026

மதுரை: மதுரையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக ஜன.27 ஞாயிற்றுக் கிழமை மதுரை வருகிறார் பாரதப் பிரதமர் மோடி. இதைத் தொடர்ந்து அவர் தமிழகத்தில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று கூறப் படுகிறது. இதனால், பாஜக.,வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந் நிலையில் மதுரையைச் சேர்ந்த தேவேந்திர குமார் என்பவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் கஜா புயல் சேதத்தை பிரதமர் மோடி பார்வையிட வரவில்லை என்றும், தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு திணிப்பதாகவும் குறிப்பிட்டு, பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது.

ஏற்கெனவே வைகோ, திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் பாரதப் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவோம் என கூறியுள்ளனர்.

1 thought on “மதுரை வரும் பிரதமருக்கு ‘கறுப்புக் கொடி’ காட்ட நீதிபதி ‘பச்சைக் கொடி’!”

  1. இந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டமெல்லாம் ஒரு அரசியல். அதுவும் அப்பட்டமான அரசியல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.