நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையத்தில் நீராவி குழாயில் ஏற்பட்டதால் பழுது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

கூடங்குளம் முதல் அணு உலையில் நிறுத்தப்பட்டு இருந்த மின் உற்பத்தி கடந்த 30ம் தேதி மீண்டும் தொடங்கியது. சில சோதனை முடிவுகளுக்காக அன்று மதியம் 3 மணி அளவில் நிறுத்தப்பட்டு மீண்டும் 31ம் தேதி இரவு 11.16 மணிக்கு தொடங்கியது. பிப்.1ம் தேதி மாலை 3.30 மணி நிலவரப்படி 500 மெகாவாட்டாக உயர்ந்த மின் உற்பத்தி, நேற்று மாலை 6 மணிக்கு 730 மெகாவாட்டை தொட்டது. அணுமின் நிலைய வட்டாரங்கள் கூறுகையில், ‘மின் உற்பத்தியை 1000 மெகாவாட்டாக உயர்த்த தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்’’ என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீராவி குழாயில் ஏற்பட்டதால் மின் உற்பத்தி 730 மெகாவட் எட்டிய நிலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

 

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending