ஜிஎஸ்டியால் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது என்று கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் பேசிய பா.ஜனதா மாநில தலைவரும் தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மக்கள் பாதிக்கப்படவில்லை. வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி. வரிவிகிதம் குறைக்கப்படும். தூத்துக்குடி மேலும் வளர்ச்சி பெற புதிய திட்ட அறிக்கையை கொடுத்துள்ளேன். நாங்கள் சொன்னதை செய்வோம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார். எங்களது கனவு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.