2019 ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள சாம்பியன்சிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, ஈரான், பஹ்ரைன் உள்ளிட்ட ஏராளமான நாடுகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. நேற்று நடைபெற்ற 800 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கணை கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 2 நொடிகளை போட்டி தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
அவரைத் தொடர்ந்து சீனாவின் ஷுன் யூ வாங் வெள்ளிப்பதக்கமும், கசகிஸ்தானின் மார்கரீட்டா முகாசிவா வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதேபோல் குண்டு எரிதல் போட்டியில் இந்திய வீரர் திஜிந்தர் பால் சிங் தூர் தங்கம் வென்றார். நடப்பாண்டிற்கான ஆசிய தடகள சாம்பியன்சிப் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளது. திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, சர்வதேச அளவில் கலந்து கொண்ட 3வது போட்டியிலேயே தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.