தமிழகத்தில் பிடிபட்ட ரூபாய் 570 கோடிக்கு விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி !

தமிழகத்தில் 3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி 3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி ரூபாயை விடுவிக்க தமிழகத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்ததின் காரணமாகவே மத்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தலையிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் வங்கி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோர 18 மணி நேரம் கழித்து ஏன் முடிவு செய்தார்கள் என்று வங்கி அதிகாரிகள் மூலம் கசிந்த தகவல் பொது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறதே இதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் என்ன விளக்கம் தரப்போகிறார்கள்? இதற்குப் பிறகும் அரசினர் என்ன சொல்கிறார்கள் என்று தமிழக மக்கள் ஆவலோடும், பரபரப்போடும் எதிர்பார்க்கிறார்கள் என்று கருணாநிதி தெரிவித்தார் .
தமிழகத்தில் 3 கண்டெய்னர்களில் சிக்கிய ரூபாய் 570 கோடி சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கீழ் கூறபட்டுள்ள கேள்விகள் எழுந்து பெரும் விவாதமாகி உள்ளது.
 
570 கோடி ரூபாயைக் கொண்டு சென்ற மூன்று கண்டெய்னரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது ஏன் நிற்க வில்லை ?
மூன்று கண்டெய்னரில் கொண்டு செல்லக் கூடிய அளவுக்கு எந்த ஒரு வங்கியிலாவது பணம் வைத்திருக்கலாமா .?
 
ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு 570 கோடி ரூபாய் பணத்தை மூன்று கண்டெய்னரில் எடுத்துச் செல்ல காரணம் என்ன .?
 
அந்த வங்கியின் அங்கீகாரம் பெற்ற அதிகாரி எவரேனும் கன்டெய்னருடன் செல்லவில்லை ?
 
570 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் செல்ல மூன்று கன்டெய்னர்கள் தேவையா .?
 
லுங்கி அணிந்த நிலையில் காவல்துறையினர் நிலையில் செல்ல காரணம் என்ன .?
 
570 கோடி ரூபாய் பணத்திற்கு இன்சூரன்ஸ் ஆவணங்கள் இல்லாமல் இருப்பதின் காரணம் .?
 
எந்த உரிய ஆவணங்களும் இல்லாமல் 570 கோடி ரூபாய் பணத்தை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் பகலில் எடுத்துச் செல்லாமல் விடுமுறை நாளில் இரவில் எடுத்துச் செல்ல காரணம் என்ன .?
 
570 கோடி ரூபாய் உள்ள மூன்று கண்டெய்ருக்கும் சீல் வைக்கப்படவில்லை ?
 
அந்த வண்டியிலே இருந்தவர்கள் காட்டிய ஜெராக்ஸ் நகல்களிலும் முரண்பாடான தகவல்கள் இருப்பது என்ன .?
 
கோவை வங்கி அதிகாரிகள் திருப்பூரில் பணம் பிடிபட்டு 8 மணி நேரம் கழித்து பணத்திற்கு உரிமை கோரியது ஏன். ?
 
பிடிபட்ட 570 கோடி ரூபாய் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இது வரை ஏன் எவ்விதமான விளக்கமும் அளிக்கவில்லை ?
 
570 கோடி ரூபாய் பணம் பிடிபட்டுள்ள சம்பவம் குறித்து இதுவரை தமிழகத்திலே அரசாங்கத்தின் சார்பில் ஒன்றும் பேசாமல் இருப்பது ஏன். ? என்பது போன்ற மேலும் பல்வேறான கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது .
 
மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அவரது ஓட்டினை பதிவு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்த ரூ.570 கோடி பணத்தை கைபற்றியுள்ளனர்.
 
பிடிபட்ட அந்த பணம் முதலமைச்சர் ஜெயலலிதாவுடையது என்றும் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்து இருந்த பணம் எனவும் தோல்வி பயத்தால் கொடநாட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டுள்ளது என வைகோ யூகிப்பதாக கூறியுள்ளார்.
 
மேலும் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் பணம் நிரப்பட்ட கன்டெய்னர்கள் இருந்தது என கடந்த சிலநாட்களுக்கு முன்னரே வைகோ கூறியதையும் சுட்டி காட்டியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .
 
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பிடிபட்ட ரூ.570 கோடி பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என திட்டவட்டமாக கூறுவது உண்மை தான? என்று பொதுமக்கள் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது .
 
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில் அதற்கான ஆதாரங்களையும், பிடிபட்ட ரூ.570 கோடி பணம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விவாதமாகி உள்ள மேலே கூறபட்டுள்ள கேள்விகளுக்கு என்ன விளக்கம் அளிக்க போகிறார் ?
 
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பொதுமக்கள் அனைவரும் எழுப்பும் கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமானது. அது அவரின் கடமையும் கூட.
ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories