போச்சாம் கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டிகள் சுவீடனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 1500 மீட்டர் பிரிவு ஓட்டப் பந்தயத்தில் இந்தியா சார்ப்பில் கேரளா மாநிலத்தை சேர்ந்த பி.யூ. சித்ரா பங்கேற்றார். இந்த போட்டியில் முன்னாள் காம்ன்வெல்த் போட்டி சாம்பியனான கென்யாவின் மெர்சி செரோனோ முந்தி பந்தய தூரத்தை 4:12.65செகன்ட்களில் கடந்து தங்க பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 15,00 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ஜன்சன் ஜான்சன், பந்தய தூரத்தை 3:39.69 செகன்ட்களில் கடந்து வெள்ளி பதக்கத்தை வென்றார். இவர் ஆசிய போட்டியில் தங்க பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லாங் ஜம்ப் போட்டியில் பங்கேற்ற இந்திய தேசிய அளவிலான சாதனை படைத்த வீரர் முரளி ஸ்ரீசங்கர் 7.93 மீட்டர் தூரம் தாண்டி தங்க பதக்கம் வென்றார்.