என்ன..?! 2000 ரூவா நோட்ட செல்லாம ஆக்கப் போறாரா மோடி..?! ஏகத்துக்கும் வெச்சிருக்கமே.. என்ன செய்ய?

உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல் வணிகம்
Rs2000 - 2026

2000₹ நோட்ட செல்லாம ஆக்கப்போறாரு மோடின்னு கெளம்பிராதீங்கடா போராளி பாய்ஸ்!

இங்கிலீஷ்ல என்ன எழுதிருக்குன்னா…..
ஏடிஎம் மிஷின்கள்ல 2000₹ நோட்டு வைக்க மாட்டாங்க. 2000₹ எடுத்துட்டு சில்லறைக்கு அலைய வேண்டாம்னு 500, 200 நோட்டுகளை மட்டும் அதான் வைக்கப்போறாங்க.

பேங்க்குக்கு உள்ள போய் டெல்லர்கிட்ட 2000₹ நல்ல நோட்டு கொடுத்தா டெப்பாசிட் வாங்கிப்பாரு. வேணும்னு கேட்டா அவரும் 2000₹ நல்ல நோட்டு தருவாரு. நல்ல நோட்டு செல்லும்.

சரி… இன்றைய செய்தியப் பாப்போம்…!

கறுப்புப் பணத்தைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, ஆன்லைன் பணப் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதனால், புதிதாக அறிமுகம் செய்த, 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதையும் ஆண்டுக்கு ஆண்டு மத்திய அரசு குறைத்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், ‘எப்போது வேண்டுமானாலும், 2,000 ரூபாய் நோட்டை செல்லாது என மத்திய அரசு அறிக்கும்’ என, பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்த நிலையில் இன்று காலையிலிருந்து, சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும், இந்தியன் வங்கி வரும் மார்ச் 1ஆம் தேதி முதல், 2,000 ரூபாய் நோட்டுக்களின் பரிவர்த்தனையை நிறுத்தவுள்ளதாகத் தகவல்கள் பரவி வந்தன. இதனால், பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

ஆனால் இது குறித்து இந்தியன் வங்கி அதிகாரிகள் கூறிய போது, ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பவர்கள், 4,000, 6,000 என எடுத்தால், முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளே வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் வந்து சில்லறை கேட்கின்றனர். ஏ.டி.எம்., கொண்டுவந்த அடிப்படை நோக்கம், வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனைக்காக வங்கிக்கு வரக் கூடாது என்பது தான். ஆனால் அந்த நோக்கம் சிதைகிறது.
எனவே வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுக்களை ஏ.டி.எம்.,களில் வைப்பதில்லை என இந்தியன் வங்கி முடிவெடுத்துள்ளது. வரும் மார்ச் 1ஆம் தேதி முதல், இந்தியன் வங்கி ஏ.டி.எம்.,களில், 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே நிரப்பப்படும். 2,000 ரூபாய் நோட்டுகள் உள்ள ‘டிரே’ நிரப்பப்படாது என்று விளக்கம் அளித்தனர்.

இந்தியன் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை இதுதான்!

indianbank - 2026
  • அருண்பிரபு ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + nineteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.