simbu

குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 25 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை.இப்படத்தின் டீசர் வீடியோ ஏற்கனவே வெளியாகை வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற பாடல் வருகிற 14ம் தேதி வெளியாகும் என சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Source: Vellithirai News

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending