uthayaraj - 2026

மருத்துவ‌ கல்லூரி மாணவர் ஒருவர் தனக்கு தானே விஷ ஊசி போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் உதயராஜ். துரை அரசு இராஜாஜி மருத்துவ கல்லூரியில் மயக்கவியல்துறை 2ஆம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர் வயது 29 ஆகிறது.

uthayaraj 1 - 2026

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை பின்புறம் உள்ள மதிச்சியம் முனிஸ்பல் காலணி பகுதியில், இருக்கும் விஜயகுமார் என்பவரது வீட்டில் தன்னுடைய நண்பர் ராஜேஷ் என்பவர் உடன் தங்கி படித்து வந்துள்ளார்.

நேற்று இரவு வழக்கம்போல் காலேஜ் போய்விட்டு வீட்டுக்கு வந்தார். இரவில், தன்னுடைய நண்பர் வேலைக்கு சென்று விட்டதால் தனியாகத்தான் இருந்தார். இந்நிலையில், இன்று காலை வெகு நேரமாகியும் அவர் வீட்டு கதவு அறை திறக்கப்படவேயில்லை.

இதனால் சந்தேகம் அடைநத் வீட்டு ஓனர், காவல்துறைக்கு தகவல் தந்தார். விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, உதயராஜ் பிணமாக விழுந்து கிடந்தார். அவருக்கு பக்கத்தில், அருகே ஊசி, மருந்துகள் சிதறி கிடந்தன. மேலும் கைப்பட எழுதிய ஒரு கடிதமும் இருந்தது.

uthayaraj 2 - 2026

அதில், அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை முடிவை மேற்கொள்வதாக எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவரின் உடலை காவல்துறை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது இறப்பு பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

uthayaraj 3 - 2026

மாணவரின் தந்தை உத்திராபதி கூறுகையில், “என் மகன் கஷ்டபட்டு டாக்டர்க்கு படிக்க இங்க வந்தான். கடைசில என் மகனை டார்ச்சர் பண்ணி கொன்று விட்டார்கள். அவனின் செல்போனையும், கடைசியாக எழுதிய கடிதத்தையும் மறைத்து வைத்துள்ளார்கள். இரண்டு பக்க கடிதம் இருப்பதாக சொல்கிறார்கள் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்று அழுதுகொண்டே கூறினார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending