தீபாவளி முடிந்தவுடன் ரஜினிகாந்த் முழுநேர அரசியலில் இறங்குவார்! தமிழருவி மணியன்!

Published:

thamilaruvi maniyan - 2026

சென்னையில் நடைபெற்ற கவிஞர் கண்ணதாசன் மற்றும் எம்எஸ் விஸ்வநாதன் விழாவில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி , திரைப்பட இயக்குனர் எஸ்பி முத்துராமன் தமிழருவி மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், அரசியல் கட்சி தொடங்கும் விஷயத்தில் எம்.ஜி. ஆருக்கு ஒரு நீதியா என்று கேள்வி எழுப்பினார் . அரசியல் கட்சி தொடங்கிய பின்னும் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாளையே அதிமுக ஆட்சி கவிழ்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் நாற்காலியில் இருந்து இறங்கிய அடுத்த நாள் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என தமிழருவி மணியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து கொண்டிருப்பதால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்று கேட்கின்றீர்கள். இந்த கேள்வியை எம்ஜிஆரிடம் ஏன் யாரும் கேட்கவில்லை. எம்ஜிஆருக்கு ஒரு நீதி ரஜினிக்கு ஒரு நீதியா? அவர் கட்சி ஆரம்பித்தவுடனும், தேர்தல் நேரத்திலும் தேர்தலில் வெற்றி பெற்றவுடனும், படங்கள் நடித்து கொண்டிருந்தார். ஏன், முதல்வர் பதவியை ஏற்ற பின்னர் கூட சில நாட்களுக்கு அவரே எடுத்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்தார்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

அதேபோல் ரஜினிகாந்த் தற்போது ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். அந்த படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அதனையடுத்து அவர் இன்னொரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த பட்ம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வரவுள்ளது. அதன் பின்னர் முழுமையாக அரசியல் களத்தில் குதிப்பார், அவர் வியாபரத்திற்கு அரசியலை பயன்படுத்துவதாக கூறமுடியாது.

எனவே தீபாவளி முடிந்தவுடன் ரஜினிகாந்த் முழுநேர அரசியலில் இறங்குவார்’ என தமிழருவி மணியன் தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img