பிரிந்து போன மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட கணவனுக்கு நேர்ந்த கதி.!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம் புகார் பெட்டி
abasa vedio 1 1 - 2026

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த கூனன்ப்பட்டறையை சேர்ந்தவர் காஞ்சனா-யோகேஸ்வரன் தம்பதியினர்.

இவர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்னர் யோகேஸ்வரன், காஞ்சனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்சப்பில் பரப்பியதாக தெரிகிறது.

இதனையடுத்து, செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் காஞ்சனா அளித்த புகாரின் பெயரில், யோகேஸ்வரனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

complaint 2 - 2026

இதனையடுத்து, தற்போது காஞ்சனா பெயரில், முகநூலில் போலி கணக்கு தொடங்கி அதில் காஞ்சனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அலைபேசி என்னுடன் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவரது குடும்பத்தினர் சிலரின் புகைப்படடகியும் அவர் தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார்.

இவர் பதிவிட காஞ்சனாவின் தொலைபேசி என்னை தொடர்பு கொண்டு பலரும் தனக்கு மனா உளைச்சலை அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

jaill 1 - 2026

இதனையடுத்து காஞ்சனாவின் உறவினர்கள், செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில், யோகேஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அப்புகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.