முருங்கை கிலோ ரூ.10: காய்கறிகள் விலை சரிவு

koyambedu-market சென்னை: கடந்த டிசம்பர் மாதம் கிலோ ரூ.100க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் தற்போது கிலோ ரூ.10க்கு விற்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு முருங்கைக்காயின் வரத்து அதிகரித்துள்ளதால், விலை பெருமளவு சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முருங்கைக்காயின் விளைச்சல் அதிகரித்திருப்பதாலும், தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பெருமளவு முருங்கைக்காய் வருவதாலும், விலை குறைந்துள்ளதாகக் கூறிய மொத்த வியாபாரிகள், தற்போது அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.