- எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
- தம்பி திவாகரனுக்கு அக்கா சசிகலா தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #Sasikala #Divakaran #TTVDinakaran
சென்னை: எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தம்பி திவாகரனுக்கு அக்கா சசிகலா வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது அம்மா அணிக்கு தூசி தட்டி தனி அணி தொடங்கியுள்ளார் திவாகரன். அதிமுக.,வை கைப்பற்றுவதே லட்சியம் என்று கூறிவரும் திவாகரன், எடப்பாடி ஓபிஎஸ்., அணிக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். இந்தச் சம்பவங்களால் டிடிவி தினகரன் – திவாகரன் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
இந்நிலையில், சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் திவாகரனுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சசிகலா புகைப்படத்தையோ, பெயரையோ எங்கும் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். ’என் உடன் பிறந்த சகோதரி சசிகலா’ என ஊடகங்களில் குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நோட்டீஸ் விவகாரத்தில் திவாகரன் தரப்பு இதுவரை வாய் திறக்கவில்லை.