எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தோர் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?: நீதிபதி கிருபாகரன் கேள்வி

Published:

16 June03 high court - 2026

சென்னை 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் பெஞ்ச் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்  பட்டது செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், அவர்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று நீதிபதி சுந்தரும் வெவ்வேறு தீர்ப்புகளை அளித்தனர்.  எனவே,  3-வது நீதிபதி தீர்ப்புக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப் பட்டது.

இதனிடையே தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் தீர்ப்பு குறித்து திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், தினகரன் ஆதரவு தரப்பினர் உள்ளிட்ட பலரும் விமர்சனங்களைத் தெரிவித்த போது, இன்னும் சிலர் மோசமான விமர்சனங்களை ஊடகங்களிலும் சமூகத் தளங்களிலும் முன் வைத்தனர்.

குறிப்பாக, செய்தி ஊடகங்களில்  இந்தத் தீர்ப்பு வரன்முறையின்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றின் விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன், நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் தலைமை நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சிப்பது என்பது வேறு.. இத்தகைய விமர்சனங்களை  தொலைக்காட்சிகளில் பார்த்தேன். அவர்கள் மீது போலீசார் தாமாக முன்வந்து ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

முதல்வர் உள்ளிட்டோரை பேசினால் தானாகவே வழக்குப் பதிவு செய்கிறது போலீஸ்? தலைமை நீதிபதியைப் பற்றி விமர்சிக்கும் போது அத்தகைய நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை? தலைமை நீதிபதி மீதான விமர்சனங்கள், அதன் மீதான நடவடிக்கை குறித்து வரும் 25ஆம் தேதி விரிவான அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் எனன்று நீதிபதி கிருபாகரன் அப்போது கூறினார்.

அண்மையில், இயக்குனர் அமீர் கலந்து கொண்ட டிவி விவாத நிகழ்வு ஒன்று கோவையில் நடைபெற்ற போது, தேச நலனுக்கு ஊறுவிளைவிக்கும் பீரிவைனைக் கருத்துகளைப் பேசினாரென்று, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், நெறியாளர், பேசிய அமீர் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img