குற்றாலச் சாரல்: இன்றைய சீஸன் நிலவரத்தை தெரிஞ்சுக்கணுமா?

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சுற்றுலா நெல்லை

courtallam july24 - 2026குற்றாலத்தில் இன்று காலை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் சுமாராக இருந்ததால், அவர்கள் சீஸனை நன்கு அனுபவித்து, அருவியில் குளிக்க முடிந்தது. குற்றாலம் பிரதான அருவியில் மிதமான அளவில் நீர் விழுந்தது.

குற்றாலம், செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் கடந்த இரு தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

courtallam july24 - 2026

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (24-07-2018)

பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 115.40 அடி
நீர் வரத்து : 1025.81 கன அடி
வெளியேற்றம் : 1404.75 கன அடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 122.44 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம்: NIL

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 77.72 அடி
நீர் வரத்து : 27 கன அடி
வெளியேற்றம்: 375 கன அடி

மழை அளவு:
குண்டாறு: 7 மி. மீ
அடவிநயினார்: 5 மி.மீ
கருப்பா நதி: 1 மி.மீ
செங்கோட்டை: 1 மி.மீ
சிவகிரி: 1 மி.மீ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.