திருவள்ளுர் அருகே செங்குன்றம் கிராண்ட்-லைன் பகுதியில், தெருவில் வீட்டின் முன்புறம் சுத்தம் செய்து கொண்டிருந்தார் பெண் ஒருவர். அவர் அருகே, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரிடம் இருந்து 8 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செங்குன்றம் போலீசார் நகைப் பறிப்பு நபர்களைத் தேடி வருகின்றனர்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கிராண்ட்-லைன் பகுதியில் உள்ள வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேகலா. தனது வீட்டின் வெளியே கோலம் போட தெருவில் கையில் துடைப்பம் கொண்டு பெருக்கி கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் இருவர்,பெண்ணை நோட்டமிட்டு அவரிடமிருந்து 8 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், கண் இமைக்கும் நேரத்தில் அந்த இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அருகில் இருந்த வீட்டின் வெளியே இருந்த சி சி டி வி கண்காணிப்பு கேமெராவில் பதிவான காட்சிகளை கொண்டு, செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பு மர்ம நபர்களை தேடிவருகின்றனர் இருசக்கர வாகனத்தில் வந்து தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.