செல்லூர் ராஜுவின் தாயார் காலமானார்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

sellur raju mother - 2026

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் தாயார் காலமானார். அவருக்கு வயது 95.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் தாயார் ஒச்சம்மாள்.  இவருக்கு வயது 95. பல மாதங்களாக வயது முதிர்வின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் தற்போது அஞ்சலிகாக  மதுரை செல்லூர் பகுதியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை மதியம் 1 மணியளவில் அன்னாரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. மேலும் அதிமுக அமைச்சர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த அவரது இல்லத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.