திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இரண்டுநாள் பயணமாக வந்திருந்தார் .
இன்று திருப்பூரில் பல்வேறு இடங்களில் மக்களை சந்தித்து பேசிய அவர் நாம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அதனைs செய்யாமல் இத்தனை நாட்கள் தூங்கிg கொண்டிருந்துள்ளனர்.
மதுவைg கொடுத்து மயக்கி வைத்திருந்தனர். அந்த நிலை இனி மாறும். நான் வருவதற்கு நீங்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும். பின்பு நாமாக செய்ய வேண்டிய பணிகள் நிறைய உண்டு.
இளைஞர்களை நான் வேலை தேடும் இளைஞர்களாக பார்க்கவில்லை; வருங்கால முதலாளிகளாகப் பார்க்கிறேன்.
சிறு கடன் மூலம் அவர்களை மாற்ற முடியும் அது நம்மால் முடியும் என திருப்பூர் சின்னாண்டிபாளையம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் கமலஹாசன் பேசினார்.
அவரது பேச்சின் காணொளி…