மதுரையில் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம்! துப்பாக்கிகளுடன் 4 பேர் கும்பல் கைது!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai theft gang - 2026

மதுரை: துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் கைதான 4 பேரிடம் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன!

தமிழகம் முழுவதும் நடைபெற்ற பெரும்பாலான கொள்ளைச் சம்பவங்களில் இந்த 26 பேர் கொண்ட கும்பல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதானவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் மேலூரில் கடந்த 6ஆம் தேதி மருத்துவர் பாஸ்கரன் வீட்டில் பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சம் பணம் ஒரு செல்போன் மர்ம கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டது!
இது தொடர்பாக பாஸ்கரன் கொடுத்த புகாரை அடுத்து, தென் மண்டல காவல்துறை தலைவர் சண்முக ராஜேஷ்வரன் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீஸார் தேடி வந்தனர்!

இந்நிலையில் கொள்ளையில் 26 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது! இந்த 26 பேர்களில் மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து, கணபதி, ரமேஷ், ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய ஒரு கார், 3 கைத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், ஆயுதங்கள், ரூ.32 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் இந்த கொள்ளைக் கும்பல் தமிழகம் முழுவதும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது! மேலும் இதில் தொடர்புடைய கொள்ளையர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.