வாழ்வில் ஒளி ஏற்றிய கரூர் ஆட்சியர்: நன்றி தெரிவித்த நரிக்குறவர்கள்

டாக்டர் எம்.ஜி.ஆர் வேட்டைக்காரன் புதூரில் வசிக்கும் நரிக்குறவர்கள் 52 பேருக்கு நரிக்குறவர் நல வாரியம் சார்பில் தலா ரூ 7 ஆயிரத்து 500 கொடுத்து  அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காதப்பாறை கிராமம், பஞ்சமாதேவி பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் வேட்டைக்காரன் புதூர் பகுதியில் வசிக்கும் தா.சின்னதாயி (எ) கஜேந்திரன், உ.துரைகண்ணன், கொ.இளங்கோ, வடிவேல், துரைராஜ், ராதா, சுகுமார் உள்ளிட்ட 52 பேருக்கு நரிக்குறவர் நல வாரியம் மூலம் தலா ரூ 7 ஆயிரத்து 500 பேருக்கு நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்து நரிக்குறவர்களை குஷிப்படுத்தியுள்ளார். காசோலையை பெற்றுக்கொண்ட நரிக்குறவர்கள் அம்மா ஜெ வாழ்க என்று கோஷத்துடன் வெளி வந்தனர். மேலும் ஜெ வுக்கு நரிக்குறவர்கள் ரசிகர் மன்றம் ஆரம்பிக்க உள்ளதாகவும் நரிக்குறவர்கள் சங்க தலைவர் தா.சின்னதாயி (எ) கஜேந்திரன் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி எவ்வித பாகுபாடும் இல்லாமல் தனது கடமையை சரியாகச் செய்வதாக அவர்களிடம் இருந்து பாராட்டும் பெற்றுள்ளார்.  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.