உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது… இப்ப தெரிஞ்சிக்கிட்டீங்களா?!: காட்டிக் கொடுக்கிறார் எடப்பாடியார்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
stalin edappadi - 2026

உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது என இப்போது தெரிகிறதா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

கோவை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:

உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது என்பதை, தமிழக மக்களுக்கு ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார். தேர்தலை சந்திக்க திமுக தலைவர் ஸ்டாலின் பயப்படுகிறார். உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் தான் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துவிட்டு, மீண்டும் நீதிமன்றத்துக்கு அவர் செல்கிறார்.

தேர்தலை எப்படியாவது தள்ளிப்போடுவது தான் அவரது திட்டம். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்து தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளது. மக்களிடம் விஷமத்தனமான தகவலை பரப்பி அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் நினைக்கிறார்.

தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்டதாக 3 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து கூறிக்கொண்டே தான் இருக்கிறார். அதிமுக கூட்டணி ஒன்றாக சேர்ந்து உள்ளாட்சி தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெறும்… என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதனிடையே, திமுக., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை..

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளைப் பின்பற்றாமல், #LocalbodyElections தடைபடட்டுமே என்ற உள்நோக்கத்துடன், மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து கழக மா.செ- MLA- MP.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.