railway news - 2026

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

நெல்லை சற்றுமுன் பொது தகவல்கள்
railway news - 2026
#image_title

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி & ஈஸ்டர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தாம்பரம் முதல் நெல்லை வழியே தென்காசி (செங்கோட்டை) வரை சிறப்பு ரயில் சேவை:

செங்கல்பட்டு விழுப்புரம் விருதாச்சலம் அரியலூர் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வழியாக தென்காசி வரை இயக்கப்படுகிறது.

ரயில் எண் 06135 – ஏப்ரல் 2 வியாழன்கிழமை இன்று இரவு 11.10க்கு தாம்பரத்தில் கிளம்பி, ஏப்.3 வெள்ளிக்கிழமை காலை 9.10க்கு திருநெல்வேலி வந்து, முற்பகல் 11 மணிக்கு தென்காசி வந்தடையும்.

ரயில் எண் 06136 – மீண்டும் வரும் ஞாயிறு ஏப்ரல் 5 அன்று இரவு 11 மணிக்கு செங்கோட்டையில் இருந்து கிளம்பி, நள்ளிரவு 12.50க்கு திருநெல்வேலி வந்து, திங்கள் காலை 10.45க்கு தாம்பரம் சென்றடையும் வகையில் தாம்பரம் வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது.

தாம்பரம் தென்காசி செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏப்ரல் 2ம் தேதி துவங்கி நடைபெறும். செங்கோட்டை தாம்பரம் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏப்ரல் 2 காலை 8 மணிக்கு துவங்கும்!

தேவைப்படுவோர் இந்த சிறப்பு ரயில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.