டோல்கேட் ஊழியரை கன்னத்தில் அறைந்த ஆந்திரா கார்ப்பரேஷன் சேர்பர்சன் ரேவதி!
நான் யார் தெரியுமா? என்னையே டோல் கட்டணம் செலுத்த சொல்வாயா? எத்தனை தைரியம் உனக்கு? என்று பல விஐபிகள் அங்கிருக்கும் டோல்கேட் ஊழியர்களை மிரட்டுவது உண்டு. அதுமட்டுமின்றி அடி கூட கொடுப்பதுண்டு.
தாங்கள் விஐபிக்கள் என்றும் முக்கிய மனிதர்கள் என்றும் கட்டணம் செலுத்தாமல் சென்று விடுவதுண்டு. இவர்களைத் தடுத்து நிறுத்திய தவறுக்காக அவர்கள் கைகளால் அடிவாங்கிய ஊழியர்கள் அதிகம். தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அண்மையில் ஆந்திர மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது வெளிவந்துள்ளது. ஆந்திரா வட்டெர கார்ப்பரேஷன் சேர்பேர்சன் தேவள்ள ரேவதி வெறியாட்டம் ஆடினார்.
2020 டிசம்பர் 10ஆம் தேதி வியாழக்கிழமை காலை குண்டூர் மாவட்டம் காஜா டோல் கேட் வழியே அவர் காரில் சென்றுகொண்டிருந்தார். டோல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அங்கிருந்த ஊழியர் அவரிடம் கூறினார். உடனே அவருக்கு தாங்க முடியாத ஆத்திரம் வந்தது.
நான் யார் என்று தெரியாதா? என்று கேள்வி கேட்டார். கட்டணம் செலுத்தி விட்டுச் செல்லுங்கள் என்று ஊழியர்கள் கூறினர். டோல் கட்டணம் செலுத்தாமல் செல்ல இயலாது என்று அவரிடம் குறிப்பிட்டனர். ஆனால் ரேவதி காரை முன்னோக்கி செலுத்தும் படி ஓட்டுபவரிடம் கூறினார்.
டோல்கேட் ஊழியர் சாலைக்கு குறுக்காக தடுப்புகளை வைத்தனர். அவ்வளவுதான் அவருடைய கோபம் விண்ணை முட்டியது. காரிலிருந்து இறங்கி ஒரு பெரிய ஆட்டம் போட்டார். டோல்கேட் ஊழியரை வாயில் வந்தபடி திட்டி டோல்கேட் ஊழியருடைய கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார். அதற்கு முன்பாக அறைந்து விடுவேன் என்று ஒருமுறை எச்சரித்தார் கூட.
அப்படியும் கேட்காமல் அவர் டோல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறுக்காக தடுப்புகளை வைத்ததால் பெண்மணி ஆத்திரம் தாங்க முடியாமல் அந்த தடுப்புகளை எல்லாம் தானாகவே நகர்த்தி எறிந்தார். ஊழியர் மீண்டும் எடுத்து வைப்பதற்கு முயன்ற பொழுது பளாரென்று ஒரு அறை விட்டார். எத்தனை தைரியம் உனக்கு? என்று ஆத்திரமாக கேள்வி கேட்டார்.
இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகி உள்ளன. ஊழியர் எது கூறினாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர் மீது ஆத்திரத்தை காண்பித்தார். அங்கிருந்த பிற வாகனத்தில் வந்தவர்கள் வியந்து போய் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இறுதியில் போகட்டும் விடுங்கள்… பாதையை அடைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் சண்டை போடுவது என்று பிறர் வந்து தடுத்ததால் சிப்பந்திகள் ஒதுங்கினர். அந்தப் பெண்மணி வீரத்துடன் காரில் ஏறி கிளம்பிச் சென்றார்.