
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து ஏற்பட்டது. பூந்தி தயாரிக்கும் சமையல் அறையில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கொழுந்து விட்டு எரிந்த தீயை பார்த்து பக்தர்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். விபத்து ஏற்பட்ட பூந்தி தயாரிக்கும் பகுதியில் இருந்து தான், லட்டு தயாரிப்பதற்காக பூந்தி அனுப்பி வைக்கப்படுகிறது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர். இதனால் பக்தர்கள் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.