
சிதம்பர ரகசியம் என்பது தமிழகத்தில் பெரிதும் பயன்படுத்தப் பட்டு வரும் வார்த்தை. அதென்ன சிதம்பர ரகசியம் என்றால், சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமானின் ஆகாய வெளி ரகசியத்தை ஆன்மிகமாய் உணர்ந்து காட்டும் உன்னதம். அதுவே சிற்றம்பலமாய் உலகப் புகழ் பெற்றுத் திகழ்கிறது. தமிழகத்தின் மங்காப் புகழாய் வெளித்தெரிகிறது.
இப்போது இன்னொரு சிதம்பரம் என்ற பெயரும் தமிழகத்தின் பெயரை உலக அளவில் நாறடித்துக் கொண்டிருக்கிறது. அதனை வைத்தே இப்போது ‘சிதம்பரப் பொய்’ என்ற சொல்லும் பிரபலமாகி வருகின்றது.

106 நாட்கள் திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரம், தனக்கு உடல் நலக் கோளாறு என்று சொல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற மறுநாளே போராட்டத்தில் பங்கு கொண்டு, பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தினார் என்பதுதான் உச்ச நீதிமன்றத்துக்கு அவர் காட்டியுள்ள மரியாதை என்று கிண்டல் செய்து வருகின்றனர் பலர்.
இப்போது சில தலைப்புகள் இந்தப் படங்களை வைத்து வைரலாகி வருகின்றன….
பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மத்திய அரசு திணறுகிறது: ஜாமினில் வெளியில் வந்த பொருளாதாரக் கைதி பரபரப்பு பேட்டி!
சொத்து விற்று நாட்டிற்காக கப்பல் விட்டவருக்கும், சொத்து சேர்க்க கொள்கையை விட்டவருக்கும் வித்தியாசம் தெரியாதவரா நாங்கள்!

நாட்டுக்காக சொத்தை விற்றவருக்கும்
சொத்துக்காக நாட்டை விற்றவருக்கும்… வித்யாசம் தெரியாமலா போய்டும்!
செக்கிழுத்த செம்மல் சிதம்பரம் சிறையில் இல்லையா , அது போல நானும் இருந்தேன் – ப சிதம்பரம்.
எம். எஸ். சுப்புலட்சுமி அம்மாவும் கே.பி.சுந்தராம்பாளும் இருந்த சினிமாவுல தான்,
ஷகிலா வும் சன்னிலியோனும் இருக்காங்க,
அவங்களும் இவங்களும் சேர்த்தியா, பொருளாதார சேதாரமே?
மரத்தில காய்க்கிறது மாங்கா
மட்டன் லயும் மாங்கா உண்டு
ரெண்டு ஒன்னா, மிஸ்டர் மாங்கா?
யோவ், நீ திகாருக்கு போனது பொருளாதார குற்றவாளியாத்தான்.
மத்திய அரசில் பொருளாதாரம் படிச்சவங்க இல்லே, இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில இருக்குதுன்னு எல்லாம் பேச தகுதியே இல்லாத ஆளு நீ, புரிஞ்சுதா?
சு.சா.வுக்கு கூட அந்த அருகதையில்லேன்னு சொல்லிட்டிருக்கறோம், நீ என்ன பிஸ்கோத்து?