
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கிணற்றில் வீசி கொலை செய்த கட்டட தொழிலாளிக்கு, இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.9000 அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வேலுார் மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (38)கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். .
இவர் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியிடம் ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி ஊரின் ஒதுக்குப்புறமான இடத்திற்கு கூட்டிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.
பின்னர் சிறுமியின் காதில் கிடந்த தங்க கம்மலை திருடிக்கொண்டு, சிறுமியை கொலை செய்து அதே பகுதியில் ஒரு கிணற்றில் வீசி சென்றுள்ளார்.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, வேலுார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று தீர்ப்பு வெளியானது. அதில் கார்த்திகேயனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.9,000 அபராதம் விதித்து, தீர்ப்பளித்தார்.
சிறுமியின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, நீதிபதி பரிந்துரை செய்தார்.



