காருக்குள் நல்லபாம்பு..! வண்டியை எடுக்க முடியாமல் தவித்த அதிகாரிகள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

snake car - 2026

கேரளத்தில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள முல்லேரியா என்ற இடத்தில் நல்ல பாம்பு ஒன்று அதிகாரி பயன்படுத்தும் காருக்குள் புகுந்து கொண்டதால் காரை பயன்படுத்த முடியாமல் அன்று வேலை எதுவும் நடைபெறவில்லை!

கரடுக்கா கர்மந்தோடி பிளாக் பஞ்சாயத்துக்குச் சொந்தமான கார் ஒன்று அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது! நீண்ட நேரம் வண்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நீளமான நல்ல பாம்பு ஒன்று காருக்குள் புகுந்து கொண்டது. அது என்ஜின் பகுதியில் வாலை சுருட்டி மடக்கி இருந்து கொண்டது!

பாம்பைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலர்கள், அதனை வெளியே துரத்த முயன்றனர். எவ்வளவு முயன்றும் அந்த பாம்பு இன்ஜின் பகுதியை விட்டு வெளியே வரவில்லைsnake car2 - 2026

இந்நிலையில் அந்த நல்ல பாம்பை வெளியே கொண்டு வருவதற்காக மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்! தண்ணீரை ஊற்றி அடித்தனர்! காரை பலமாக ஆட்டி ஆட்டி அசைத்தும் பார்த்தனர். எப்படியும் அந்த பாம்பு வெளியே வரும் என்றும் பார்த்தனர்! ஆனால் மக்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது

பாம்பு காரைவிட்டு வெளிவராத காரணத்தால் மிகவும் சோர்வடைந்த மக்கள் வேறு வழியின்றி அந்த வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு கார் பேனட்டை மட்டும் வெளியே திறந்துவைத்தனர்.

அந்தப் பாம்பு தன் போக்கில் தானாகவே வரட்டுமே என்று சொல்லி விட்டு வெளியேறினர்! இதனால் செவ்வாய்க்கிழமை நேற்று அந்த காரை அலுவலக பயன்பாட்டிற்கு எடுக்கவில்லையாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.