மிளகாய் காரம்தான்; விலையும் காரம் ஆனதில் விவசாயிகள் கவலை

23-04-15 AGRI Milakai News photos 04 கரூர் மாவட்டத்தில் தற்போது அடுத்தடுத்து சாகுபடியில் கடும் சரிவை கண்டுவருவதால் விவசாயிகள் கடும் அதிர்ப்தியில் ஆழ்ந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, ஈசநத்தம், பள்ளபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் முருங்கைக்காய் வரத்து அதிகரித்து இருப்பதால் முருங்கைக்காய் கிலோ ரூ 10 முதல் 25 வரை தான் விலை போகிறது. இந்நிலையில் வாழையும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த பிரச்சினை விவசாயிகளிடம் நிகழும் பச்சத்தில் பச்சை மிளகாய் உற்பத்தி அதிகரித்தும் போதிய விலை கிடைக்கவில்லை என்று  கரூர் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கரூர் அருகேயுள்ள பெரியதாதம்பாளையம்,  ஏமூர், முத்துலாடம்பட்டி, கணபதிபாளையம், போன்ற பகுதிகளில் கிணற்றுப் பாசனத்தில் பரவலாக  மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக 6 மாதங்களில் மிளகாய் அறுவடை செய்யப்படும். மிளகாய் விதைத்ததில் இருந்து 75 நாட்களில் பச்சைக்காய்களை பறிக்கலாம்.  பொதுவாக பச்சை மிளகாய் எக்டேருக்கு 10முதல் 15டன் வரை மகசூல் கிடைக்கும்.  வத்தல் மிளகாய் எக்டேருக்கு 2முதல் 3டன் வரை மகசூல் பெறலாம். தற்போது பச்சை மிளகாய் கொள்முதல் விலை குறைந்துள்ளது. தற்போது விவசாயிகளிடமிருந்து ரகத்திற்கேற்ப கிலோ ரூ. 15 முதல் ரூ.20 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். வியாபாரிகளுக்கு கிடைக்கும் லாபம் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர். இதுகுறித்து விவசாயி ராமசாமி என்பவர் கூறுகையில், 23-04-15 AGRI Milakai News photos 03 தோட்டக்கலைத்துறையினர் மிளகாய் சாகுபடிக்கு அடிக்கடி ஆலோசனை வழங்க வேண்டும். மானியம் அளிக்க வேண்டும்.  மிளகாய் விதையை ஒரு கிலோ ரூ.600க்கு வெளிமார்க்கெட்டில் வாங்கி விதைக்கிறோம். அறுவடை செய்யும் வரையில் பல்வேறு செலவுகளை செய்து பயிரைக் காப்பாற்ற வேண்டியதிருக்கிறது. நல்ல மகசூல் இருக்கும் பட்சத்தில் 50 சென்ட் நிலத்தில் 20 மூட்டை விளைச்சல் மகசூல் கிடைக்கும். ஒருமூட்டையில் 100கிலோ வீதம் 2 ஆயிரம் கிலோ மிளகாய் எடுக்கலாம்.  முன்பு மார்க்கெட் விலை கிலோ ரூ.50வரை இருக்கும். நல்ல விளைச்சல் இருந்தும் தற்போது கொள்முதல் விலை குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்றார். இதற்கு ஒரே தீர்வு குளிர்பதன கிட்டங்கிகளை அரசு உருவாக்கி பாதிப்புக்குள்ளான விவசாய பொருட்களை அரசே வாங்கி அந்த குளிர்பான கிட்டங்கியில் சேமித்து பதப்படுத்தி உரிய தொகை வரும் பட்சத்தில் அரசே அதை விற்றால் மட்டுமே முடியும் என விவசாயிகளும், விவசாயிகள் சங்கங்களை சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.