மருந்து விலைக் கட்டுப்பாடு தளர்த்தக் கூடாது: ஜி.கே.மணி

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்தது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி பேசியபோது…. மத்தியஅரசு மருந்துக்கான விலை கட்டுப்பாட்டைத் தளர்த்தப் போவதாக தகவல் உள்ளது. இதனால் அதிக தேவையுள்ள மருந்துகளின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே விலைகட்டுப்பாட்டை தளர்த்தக்கூடாது. மாணவர்களுக்கு கல்விக்கடன் எளிமையாக கிடைக்க வழிசெய்ய வேண்டும். விவசாயிகள் வாழ்க்கையை மேம்படுத்த அரசு வட்டியில்லா கடன் வழங்கவேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். திருநெல்வேலி தூத்துக்குடி வறட்சி மாவட்டமாக உள்ளது. தாமிரபரணி ஆற்றிக் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலம் கையகப்படுத்தும் சட்டம் தேவையற்றது. மத்திய அரசு இதை கைவிட வேண்டும். என்றார்.