பவானி ஆற்றில் குளித்த 3 பேர் மாயம்

கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஊட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணியில் மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.