tenkasi-tahsildar-தென்காசி: குணராமநல்லூர் வருவாய் கிராமத்தில் 3366 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கும் விழா நடைபெற்றது. குணராமநல்லூர் வருவாய் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் முருகேசன் தலைமை தாங்கினார். மண்டல துனை வட்டாட்சியர் எட்வர்ட், கல்லூரணி வருவாய் ஆய்வாளர் சிவன்பெருமாள் கீழப்பாவூர் யூனியன் துணை சேர்மன் உத்திர குணபாண்டியன், குணராமநல்லூர் பஞ் தலைவர் மாரிமுத்து, கல்லூரணி பஞ் தலைவர் தமிழ்செல்வன் என்ற ராமசாமி, சமக மாவட்ட செயலாளர்கள் அதியமன், துரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர் குணராமநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அருள் லிங்கம் வரவேற்றார். விழாவில் தென்காசி வட்டாட்சியர் சொர்ணராஜ் தமிழக அரசின் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, மற்றும் கிரைண்டர் ஆகியவற்றை வழங்கி துவக்கி வைத்தார் , குணராமநல்லூர் வருவாய் கிராமங்களான கடபோகத்தி, குபேரபட்டணம், வேட்டைகாரன் குளம், கண்டமங்கலம், மேலமெஞ்ஞானபுரம், புளிச்சிகுளம், முப்புலியூர், புல்லுக்காட்டுவலசை, அருந்ததியர்புரம், மத்தளம்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3366 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது . விழாவில் கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபாகர், நடராஜன், முகம்மது அப்துல் அலி, கிராம உதவியாளர் சங்கரவேல் அதிமுக பிரமுகர்கள் புல்லுக்காட்டு வலசை தமிழ்செல்வன், வேல்முருகன், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தனித்துணை வட்டாட்சியர் துரைப்பாண்டியன் நன்றி கூறினார். செய்தி : செ.பிரமநாயகம்-தென்காசி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending