நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐ.,க்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

Published:

nirmala devi1 - 2026

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு இழுத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐ., விசாரிக்க வேண்டும் என்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது  மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை. மேலும், யாருக்காக மாணவிகளை தவறான பாதைக்கு நிர்மலாதேவி அழைத்தார் என விசாரிக்கவில்லை என மனுதாரர் உள்நோக்கத்துடன் கேட்டிருந்தார்.

Related articles

Recent articles

spot_img