செங்கோட்டை அருள்மிகு தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோவில் வருஷாபிஷேகம்

Published:

varushabishegam - 2026செங்கோட்டையில் உள்ள அருள்மிகு தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோவிலில் இன்று வருஷாபிஷேகம் மிகவும் விமர்சியாக நடைப்பெற்றது.

இக்கோவிலில் கடந்த 2009 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.10 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் 12/07/2019 வெள்ளிக்கிழமையான இன்று நடைப்பெற்றது, 9 மணியிலிருந்து 10.25 க்குள் விமான அபிஷேகம் நடைப்பெற்றது.varushabishegam1 - 2026அந்தவகையில் இன்று காலையில் இருந்து தேவதா அனுஞை, எஜமானர் அனுஞை, மஹாகணபதி ஹோமம்,மூலமந்திர ஹோமம்,அஸ்திர ஹோமம்,திரவியாகுதி, மஹாபூர்ணாகுதி ஆகியன நடைப்பெற்று, அதனைத் தொடர்ந்து ,மூலவருக்கு அபிஷேகமும்,விமான அபிஷேகமும் நடைபெற்றது. varushabishegam2 - 2026பின் விசேஷ அலங்கார தீபாராதனையும் நடைப்பெற்றது,இதனை கோவிலின் அர்ச்சகர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.கோவில் அதிகாரிகளும், பக்தர்களும் கலந்து கொண்டு அருள்மிகு தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகரநாத சுவாமியின் அருளுக்கு பாத்திரமானார்கள்.varushabishegam3 - 2026மேலும் மாலை 6 மணிக்கு தீபாராதனையும், சுவாமி அம்பாள் பக்தி உலாவும் உள்ளது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img