தருமபுரி மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரியில் ஆலங்கட்டியுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த கோடை மழை பெய்தது. அரூரில் ஆலங்கட்டியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கடும் மழை காரணமாக வறண்ட நிலையில் காணப்பட்ட ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தருமபுரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.