vhp interview sthanumalayan madurai - 2026

ஜூன் 4, 5ல் மதுரையில் துறவியர் மாநாடு: விஎச்பி., ஸ்தாணுமாலயன் தகவல்!

மதுரை Featured சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
vhp interview sthanumalayan madurai - 2026

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் மத கருத்துகளை கற்று கொடுக்க அவரவர் மதங்களில் சமயக் கல்வியை கற்றுத்தர வேண்டும் என விசுவ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர் ஸ்தாணுமாலயன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

விசுவ ஹிந்து பரிஷத் அகில உலக இணை பொதுச் செயலாளர் கோ.ஸ்தாணுமாலயன், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…

“மதுரையில் ஜூன் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் துறவிகள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில், 300 க்கும் மேற்பட்ட துறவிகள் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள், இந்து அமைப்புகள் மாநாட்டில் பங்கேற்பு உள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் மதக் கருத்துக்களை கற்றுக் கொடுக்க அவரவர் மதங்களில் சமயக் கல்வியை கற்றுத்தர வேண்டும். தமிழகத்தில் மாணவர்களுக்கு முறையான கல்வி முறை இல்லாத காரணத்தால், மாணவர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்கள்.

கிறிஸ்தவ பள்ளிகளில் மத மாற்றங்கள் நடைபெறுகிறது, திருவள்ளூரை கிறிஸ்தவர் ஆகவும், சைவ, வைணவ வழிபாட்டு முறைகளை கிறிஸ்தவர்களின் தோமா வழிபாட்டு முறையென சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

அப்போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவரவர் மதம் சார்ந்த கல்வியை மதச்சார்பற்ற தமிழக அரசு கற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார். இந்த பத்திரிகையாளர் சந்மதுரை நிர்வாகி வேணுகோபால், தினமலர் நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, மதுரை தேவகி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் நாகேந்திரன், மாநில துணை தலைவர் கதிர்வேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.