சென்னை: புகழ்பெற்ற பல கோயில்களில் வசதிகளைக் காரணம் காட்டி, அவற்றின் புனிதத்தைக் கெடுக்கும் வேலைகளை மட்டும் சரியாகச் செய்து வருகிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள்!
கோயிலைக் கட்டிய மன்னன் கூட, அந்தக் காலத்தில் கோபுரத்தைக் கடந்து உள்ளே நடந்துதான் வந்திருக்கிறான். அரண்மனை போல் கோயிலை பிரமாண்டமாகக் கட்டினாலும், அதில் எங்குமே ரதமோ வண்டியோ வரும் அளவுக்கு வாசல் அமைந்திருக்காது.
ஆனால், வெறும் நிர்வாகப் பொறுப்பை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ள அறநிலையத் துறை அதிகாரிகளோ, கோயில் வளாகத்துக்குள் அமைந்திருக்கும் அலுவலக அறைக்கு தங்கள் கார்களிலும் ஜீப்களிலும் வருவதற்கு ஏற்ப வாசல்களை இடித்தும் சாய்வு படிகள் வசதியை அமைத்தும் கோயில் அமைப்பையே மாற்றி அமைத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், பழங்கால மதில் சுவரையே ஒரு புறம் இடித்து, வண்டி செல்வதற்கான வாசலாகவே சில கோயில்களில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலில், கிழக்கு வாசலை வாகனப் பாதையாக்கி, மிக மிக நுணுக்கமாக கவனித்துப் பேண வேண்டிய ராயர் மண்டபத்தை கார் செல்லும் ரோடாக்கி வாகன பார்க்கிங் செய்து வைத்திருக்கிறார்கள்.
இதுதான் அரசு அதிகாரிக்கும் சாமானிய மக்களுக்கும் உள்ள வித்தியாசம் என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஈரோடு மாவட்டம்- சத்தியமங்கலம் நகரில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் அரசு அதிகாரியின் வாகனம், கோவில் பிராகாரத்தில் நடுவில் நிறுத்தி கழுவப்பட்டது! இதே இடத்தில் ஒரு சாதாரண மனிதன் தனது புதிய வண்டியை நிறுத்தி பூஜைகூட செய்ய முடியாது!
ஆக, அதிகாரிகளைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் வெறும் காட்சிப் பொருள்தானா என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்? இது குறித்து உரிய விசாரணை நடத்தப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு!





திராவிட திரà¯à®Ÿà¯à®Ÿà¯à®¤à¯à®¤à®©à®¤à¯à®¤à®¿à®©à¯ விளைவà¯
Use violence to stop such arrogance