suvenkatesan visakan - 2026

மதுரையின் எம்.பி.,யாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் இப்போது அதிகாரியை மிரட்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

கடந்தமுறை மதுரை எம்பி.,யாக இருந்தவர் அதிமுக.,வின் கோபாலகிருஷ்ணன்! இவர், தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சிக் கட்டடம் ஒன்றை புதுப்பித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகமாக பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது எம்.பி., ஆகியுள்ள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன், தனக்கும் அதே அலுவலகத்தை கொடுப்பார்கள் என்று எண்ணியுள்ளார். ஆனால், அவருக்கு அந்தக் கட்டடத்தை கொடுக்க உள்ளூர் அமைச்சர் முட்டுக்கட்டை போட்டுள்ளார் என்கிறார்கள்.

இந்நிலையில், தனக்கு அந்தக் கட்டடத்தை ஒதுக்கித் தருமாறு, மாநகராட்சி ஆணையர் விசாகனைப் போட்டு உலுக்கியுள்ளார் சு.வெங்கடேசன்.

ஆனால் மாநகராட்சி ஆணையர் விசாகனோ, மிகவும் அமைதியானவர் என்றும் அன்பானவர் என்றும் பேர் எடுத்தவர். அதிர்ந்துகூட பேசத் தெரியாதவர் என்கிறார்கள் உடன் பணிபுரிபவர்கள்.. அவரைப் போய் சு.வெங்கடேசன் மிரட்டியதாகவும், அதற்கு அவர் அந்தக் கட்டடம் உள்ள இடத்தில் வணிக வளாகம் வருகிறது என்று சொல்லி சமாளித்ததாகவும் கூறுகிறார்கள்!

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

ஆனால் இதனால் எல்லாம் சற்றும் அமைதியடையாக கம்யூனிஸ்ட் வெங்கடேசன், அமைதிப் பேர்வழியான அதிகாரியை கண்டபடி பேசி, மிரட்டிச் சென்றதாக கூறுகிறார்கள். இதனால் மாநகராட்சி ஆணையர் விசாகன், கடும் மனஉளைச்சலுக்கு ஆட்பட்டிருக்கிறாராம்!

இது குறித்து விவரம் தெரியவந்ததும், மாநகராட்சியில் பணி புரியும் அதிகாரிகள், கம்யூனிஸ்ட் எம்.பியின் அறியாமையையும் அராஜகத்தையும் சொல்லி வருத்தப் படுகிறார்களாம்! எம்.பி., அலுவலகக் கட்டடம் தேவை என்று மாவட்ட ஆட்சியரிடம் கேட்பதை விட்டுவிட்டு, மாநகராட்சி ஆணையரைப் போய் மிரட்டிச் சென்றிருக்கிறாரே.. இது நியாயமா? என்று மாய்ந்து போகிறார்கள்!

கம்யூனிஸ்ட் என்றாலே மிரட்டிப் பிழைப்பதுதான்! அதற்கு ஒரு அப்பாவி அதிகாரியா பலிகடா ஆகவேண்டும்?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending