இறந்தவர் உயிர்த்தெழுந்தார்..! ஒரிசாவில் நடந்த அதிசயம்!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
Funeral Procession - 2026

ஒரிசா மாநிலத்தில் கஞ்சம் என்னும் மாவட்டத்தில் கபகல்லா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மாலிக் (55) என்பவர் உள்ளார் இவர் வீட்டிற்கு அருகே உள்ள காட்டில் ஆடு மாடுகளை மேய்க்கும் பணியினை செய்து வருபவர்..

நேற்று முன்தினம் காலை அவ்வாறு ஆடு, மாடுகளை மேய்க்க சென்ற மாலிக் மாலை நேரத்தில் வீடு திரும்பவில்லை. ஆனால் ஆடு, மாடுகள் மட்டும் பதிவு பழக்கத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து சேர்ந்தன.
உறவினர்கள் மாலிகை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மாலிக் காட்டின் ஒரு பகுதியில் விழுந்து கிடந்ததை உறவினர்கள் பலர் கண்டயுடன் அவர்கள் மாலிக்கை தூக்கி சென்றனர்.

அப்போது அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததால், அவர் இறந்துவிட்டதாக அவர்களே ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். பின்னர் அவருடைய உடலை தகனம் செய்வதற்காக இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்தனர்.

அவருடைய உடலை தகனத்திற்கு தூக்கி சென்று கொண்டிருந்தபோது, அவர் அங்கும் இங்கும் தன்னுடைய தலையை அசைத்துள்ளார். இதனால் சிலர் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓடிவிட்டனர். ஆனால் சிலர் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

yesu - 2026

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. “கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலியினால் மாலிக் மிகவும் சோர்வுற்று மயக்கமடைந்திருக்கிறார். தகுந்த நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளித்ததால் அவரை பிழைக்க வைக்க முடிந்தது. தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக உள்ளார்” என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.