குழந்தை இல்லாத ஏக்கம்; பரிகாரம் கேட்டு சாமியாரை அணுகிய பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை
child 4 - 2026

சென்னை தியாகராய நகரை சேர்ந்த செல்வியின் மகள் வித்யாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.

இதனால் மனவேதனையில் இருந்த வித்யாவின் தாயிடம் அவரது உறவினரான மாலதி என்பவர் ஒரு சாமியாரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

poli samiyar - 2026

உடனே தாயும் மகளும் அந்த சாமியாரை சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த சாமியார் வித்யாவுக்கு செய்வினை இருப்பதாக கூறியுள்ளார். அதனை எடுத்துவிட்டால் குழந்தை பிறக்கும் எனக் கூறியுள்ளார்.

அதற்கு 1 லட்சம் செலவு ஆகும். எனவே பணத்தை தயார் செய்து கொண்டு வாருங்கள் எனவும் கூறியுள்ளார். தாயும் மகளும் பணத்துடன் நேற்று முன்தினம் மாலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

money 1 - 2026

அப்போது அங்கு வந்த சாமியார் பணத்தை பெற்று கொண்டு பூஜை பொருட்கள் வாங்கி வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் சாமியார் வராததால் சந்தேகமடைந்த வித்யா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவமனையில் உள்ள கேமராவின் மூலம் அந்த போலி சாமியாரைத் தேடி வருகின்றனர்.

1 thought on “குழந்தை இல்லாத ஏக்கம்; பரிகாரம் கேட்டு சாமியாரை அணுகிய பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!”

  1. செய்திக்கான தலைப்பு தினசரி -க்கு ஏற்றதல்ல. இனி வரும் காலங்களில் இது போன்ற பொருத்தமில்லாத தலைப்புகளை போடாதீர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.