துண்டு சீட்டிலிருந்து ப்ரமோஷன்! தேறுவாரா திமுக தலைவர்?

Published:

stalin 2 1 - 2026

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று உறுப்பினராக தம்மை இணைத்துக் கொண்டார்.

anna lib - 2026

அண்ணாவின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு 2010-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி முதல்வராக இருந்த கருணாநிதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக இது போற்றப்படுகிறது.

stalin 3 1 - 2026

பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட நூலகமாக இது உருவாக்கப்பட்டது. பல லட்சம் புத்தகங்களைக் கொண்டிருக்கும் இந்நூலகம் போட்டி தேர்வாளர்களுக்கான வாசஸ்தலமாக திகழ்கிறது.

தற்போது தமிழக அரசின் பராமரிப்புடன் அண்ணா நூற்றாண்டு நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தை திமுக தலைவர் ஸ்டாலின், லோக்சபா எம்.பி. ஆ. ராசா உள்ளிட்டோர் இன்று பார்வையிட்டனர்.

அங்கு வைக்கப்பட்ட நூல்கள் குறித்து திமுகவினர் ஆய்வு செய்தனர். பின்னர் நூலக பிரமுகர்கள் வருகைப் பதிவேட்டில் ஸ்டாலின், ஆ.ராசா உள்ளிட்டோர் கையெழுத்தினர். இதன் பின் நூலகத்தை சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து புற்ப்பட்டனர்..

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!
stalin 7 - 2026

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்ட ஸ்டாலின் இன்று அந்நூலகத்தில் உறுப்பினராக இணைந்தார் என தெரிவித்துள்ளது. மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பதிவில், பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்’ உறுப்பினர் சேர்க்கை தொடங்குவதாக அரசு நேற்று அறிவித்தது. இதனையடுத்து, இன்று காலை, #AnnaCentenaryLibrary சென்று என்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

stalin 4 1 - 2026

“மாணவர்களின் அறிவுத் தேடலுக்குப் பெரிதும் பயனளிக்கும் ‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தை’, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்காமல், இனியாவது தொடர்ந்து நல்ல முறையில் பராமரித்திடவும், படிக்க வரும் மாணவ-மாணவியர்கள் குறைகளை களைந்திடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்!” இவ்வாறு ஸ்டாலின் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Related articles

Recent articles

spot_img