மாவோயிஸ்ட்டு அச்சுறுதல்! கேரளாவில் தீவிர கண்காணிப்பில் 3 மாவட்டங்கள்!

அடடே... அப்படியா? இந்தியா
maoists - 2026

இந்தியாவில் உள்ள 30 மாவட்டங்களுக்கு மாவோயிஸ்ட்டுகளால் ஆபத்து ஏற்பட உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதில் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை கேரள அரசுக்கு தகவல் அனுப்பியது. இதையடுத்து 3 மாவட்டங்களிலும் 250 காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆதிவாசி கிராமங்கள், மற்றும் கிராமப்பகுதி உள்பட அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் யாரேனும் சுற்றி திரிகிறார்களா? என்பதை கண்காணித்து வருகின்றனர். அதேபோல் பக்கத்து மாவட்டமான நீலகிரி மாவட்ட எல்லையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.