எங்கள் தளபதி விஜய் அவர்களுக்கு… சொர்ணநாதன் எழுதும் மனம் திறந்த மடல்!

vijay in bigil - 2026

எங்கள் தளபதி விஜய் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்.????

நான் சொர்ண நாதன் என்னுடைய id. 152263- 2015- 0274. நான் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவன். பள்ளியில் படிக்கும் காலம் முதல் தங்களுடைய ரசிகனாக இருந்து கொண்டிருக்கிறேன். உங்களுடைய கடைசியாக வந்த சர்க்கார் படத்தை 7 முறை பார்த்து ரசித்தவன் நான். நேற்று வரை தங்களுடைய ரசிகனாக வாழ்ந்து கொண்டிருப்பவன். இன்று முதல் உங்களை விட்டு விலகும் எண்ணத்தில் இருக்கிறேன். நான் மட்டுமன்றி எங்கள் பகுதியில் உள்ள சுமார் 170 ற்கு மேற்பட்ட உங்கள் ரசிகர்கள் ரசிகர் மன்றத்தில் இருந்தும் உங்கள் ஆதரவு நிலையில் இருந்தும் விலகுவதற்கு தயாராக இருக்கிறோம். உங்கள் மீது உயிராக இருந்த நாங்கள் இந்த முடிவை எடுப்பதற்கு என்ன காரணம்?

அதற்கு காரணம் சினிமா துறையில் முழு ஈடுபாடு இருப்பது வரை நாங்கள் உங்களுடைய ரசிகர்களாக இருந்தோம். ஆனால் நீங்கள் சினிமா துறையை பயன்படுத்தி எங்களுடைய ஆதரவைப் பயன்படுத்தி, எங்களுடைய உழைப்பை பயன்படுத்தி மறைமுகமாக நீங்கள் பின்பற்றும் அந்நிய ஆபிரகாமிய மதமான கிறிஸ்தவ மதத்தை தமிழர்கள் மீது மிகத் தந்திரமாக திணிப்பதை நாங்கள் தற்போது உணர்கிறோம்.

தீபாவளியன்று வெளியாக இருக்கும் பிகில் படத்தின் மீது மிகுந்த ஆவலோடு இருந்த எங்களை ஒரு காவிச் வேட்டி கருப்பு சட்டை அதோடு ஒரு சிலுவை மாலையை அதிக விலை கொடுத்து வாங்கி அணிவதற்காக உங்கள் சார்பாக தூண்டுதல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு ரசிகரிடமும் இருக்கின்ற ஒவ்வொரு பைசாவையும் உறிஞ்சி எடுப்பதற்கு நீங்கள் முயலுவது போல தென்படுகிறது. எங்கள் பணத்தை செலவு செய்து அந்நிய அடிமை சின்னமான சிலுவை மாலையைப் வாங்கி அணிய வேண்டுமாம். மட்டுமன்றி நீங்கள் திரைப்படத்தில் கூட அந்த சிலுவையைப் அதிகமாக பயன்படுத்தி நடிப்பது மட்டுமன்றி எங்களுடைய ஹிந்து மதத்தை மிகத் தரக்குறைவாக இழிவு படுத்தி பேசுவது பற்றி தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

உங்களது திரைப்படங்களை வெற்றி ஆக்குவது எங்களை போன்ற ரசிகர்கள் பங்கு அளவிட முடியாதது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

ஒவ்வொரு விஜய் ரசிகனும் உங்களுக்காக தங்கள் சொந்த பணத்திலிருந்து செலவு செய்து உங்களுடைய மார்க்கெட்டை உயர்த்தி காண்பிக்கிறோம். நீங்கள் வளம் பெற நாங்கள் அல்லும் பகலும் உழைக்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட எங்கள் மனங்களை புண்படுத்தும் வகையில் நீங்கள் எங்கள் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை வைத்தும் வசனங்களை வைத்தும் திரைப்படங்களில் நடிக்கிறீர்கள். அதற்கு முத்தாய்ப்பாக தீபாவளி அன்று வெளிவர இருக்கும் பிகில் படத்தில் நீங்கள் பயன்படுத்தும் அந்நிய இறக்குமதி மதமான கிறிஸ்துவத்தை மதத்தை எங்கள் மீது திணிப்பது போல காட்சிகளை திணித்து இருக்கிறீர்கள் என்பது தென்படுகிறது. உங்களுக்கு வேண்டுமானால் கழுத்தில் கொலை கருவியான சிலுவையைப் கழுத்தில் தொங்க விட்டு சுமந்துகொண்டு நடக்கலாம், நடிக்கலாம். ஆனால் உங்களுடைய நடிப்பை பார்த்து உங்களுடைய ரசிகர்களாக நாங்கள் அதை சுமக்க வேண்டிய தேவையில்லை.

எதற்காக அந்நிய வாடிகன் நாட்டின் அடிமை சின்னத்தை நாங்கள் சுமந்து கொண்டு திரிய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

அந்த மதத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதை ரசிகர்கள் ஆகிய எங்கள் மீது திணிக்கப் வேண்டியதின் காரணம் என்ன? அப்படியே ஒருவேளை வாட்டிகன் நாட்டில் அடிமைச் சின்னமான அந்த சிலுவையைப் நாங்கள் சுமந்து கொண்டு திரிவதால் எங்களுடைய கஷ்டங்கள், கவலைகள், நோய்கள், நொடிகள், பிரச்சனைகள், என்று அனைத்தும் தீர்ந்து விடுமா?

அப்படி அது தீர்ந்துவிடும் என்று சொன்னால் இந்தியாவிலுள்ள 80% கிறிஸ்தவர்களை கொண்ட நாகலாந்து மிசோரம் மாநிலங்கள் ஏன் தற்போதும் பின்தங்கிய நிலையில் அந்த மாநிலங்களில் சமாதானம் இல்லாமல், தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளினால் ஒழுகி, வறுமை, நோய், பொருட்களின் தட்டுப்பாடு, நல்ல வசதிகள் இன்மை ஆகியவைகளால் அந்த மாநிலங்களில் திக்குமுக்காடி கொண்டு வருகிறது?

vijay 1 - 2026

இது நிர்வாக பிரச்சனை என்று காரணம் சொன்னால், பின் எதற்காக இந்த சிலுவையைப் நாங்கள் சுமக்க வேண்டும்?

தமிழர்களுக்கும் அந்நிய கொலை கருவியான சிலுவைக்கும் என்ன தொடர்பு என்பதை நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.

அதோடு இந்த சிலுவையை அணிந்தவர்கள் தானே 2004 சுனாமியின் போது வேளாங்கண்ணி சர்ச்சில் மாதாவின் சிலை முன்பு நூற்றுக்கணக்கில் பிணமாக கிடந்தது?

அதோடு இந்த சிலுவையை அணிந்தவர்கள் தானே 2017 ஒக்கி புயலின் போது, கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பிணமாக கரையில் ஒதுங்கியது?

அதோடு இந்த சிலுவையை அணிந்தவர்கள் தானே 490 பேர்கள், இந்த ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று குண்டு வெடித்து சர்ச்சுக்குள் உடல் சிதறி பிணமாக மாறியது?

சொந்த கிறிஸ்தவர்களையே காப்பாற்ற முடியாமல் போன இந்த இறக்குமதி சிலுவையை ஹிந்துக்களாகிய நாங்கள் எதற்காக அணிய வேண்டும் என்பதை நீங்கள் விளக்க வேண்டும்.

எங்கள் தமிழ்நாட்டு கலாச்சாரத்திற்கும் எங்கள் இந்திய கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் எதிராக இருக்கின்ற இந்த சிலுவையை நாம் எதற்காக அணிய வேண்டும் என்பதை எங்களுடைய தலைவராகிய நீங்கள் விளக்க வேண்டும். இல்லையேல் எங்கள் பகுதி ரசிகர்மன்ற ரசிகர்கள் மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர் மன்றத்தில் உள்ள அனைத்து ரசிகர்களும் ( 90% ரசிகர்களும் ஹிந்துக்கள்) விலகி உங்களுடைய மிகத் தந்திரமான மதமாற்ற முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்பதை கூறிக் கொள்கிறோம். எங்களது உழைப்பில் உங்களது மதத்தை எங்கள் மீது திணிக்காதீர்கள்.

நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதீர்கள் என்ற அடிப்படையில் உங்கள் ரசிகர்களை பற்றி விசாரிக்காமல், உங்கள் மீது என்ன தவறு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

அந்நிய ஆபிரகாமிய மதத்தை உங்கள் ரசிகர்களாகிய எங்களின் மீது திணிக்க முற்படாதீர்கள். அப்படி திணிக்க முற்படுவீர்கள் என்றால் இதுவே உங்களின் தீய சின்னத்திற்கு ஒரு சாவு மணியாக இருக்கட்டும்.

இப்படிக்கு உங்கள் அதிதீவிர ரசிகனாக இருந்த

சொர்ண நாதன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories