லத்தியை சுழற்றிய காவலர்! லத்தி பட்டதோ இவர்மீது பின்னர் நடந்த விபரிதம்!

Published:

trafic police - 2026

தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்திருக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின்படி அபராத தொகை அதிகரித்துள்ளதால், தமிழகத்தின் பல பகுதிகளிலும் போக்குவரத்துக் காவலர் அடாவடியாக வாகன சோதனை என்கிற பெயரில் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனார்.

கள்ளக்குறிச்சியில் தீயணைப்பு நிலையம் அருகில் காவல்துறையின் நின்றுக் கொண்டிருந்த போது, ஹெல்மெட் அணியாமல் கச்சிராயபாளையத்தில் இருந்து செந்தில் மற்றும் அவரது பாட்டி அய்யமாள் ஆகிய இருவரும் வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார்கள்.

அவர்களை வழிமறித்த காவலர், வண்டியை நிறுத்தச் சொல்வதற்காக லத்தியை செந்திலை நோக்கி சுழற்றியிருக்கிறார்கள். இதில், அவர் குனிந்து கொள்ள, பின்னால் அமர்ந்து இருந்த அய்யம்மாள் மீது லத்தி பட்டு, வண்டியிலிருந்து நிலைதடுமாறி அவர் கிழே விழந்தார். அதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி அய்யம்மாள் இறந்தார்.

இதனை அடுத்து பொது மக்கள் அரசு மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த விவகாரத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

Related articles

Recent articles

spot_img