பிரபல தொகுப்பாளினி சமையல் அறையில் மர்மமான முறையில் மரணம்!

அடடே... அப்படியா? இந்தியா
jakijon 2 - 2026

திருவனந்தபுரம் குறுவங்கோணம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜேஜி ஜான். இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

மேலும் பிரபல விளம்பர மாடலான இவர் யூடியூபில் ஏராளமான சமையல் வீடியோக்களையும் வெளியிட்டு வந்துள்ளார். இவர் ரோஸ்பவுல் என்ற தொலைக்காட்சியில் ஜாகிஸ் குக் புக் என்ற ஷோவை நடத்தி வந்தார்

இந்நிலையில் அவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்ற அவர் தற்போது அவரது அம்மாவுடன் வசித்து வந்துள்ளார்.

jakijon - 2026

மேலும் பிரபலமாகி பிஸியாக இருந்து வந்த அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது நண்பர் போன் செய்துள்ளார்.

ஆனால் அவர் வெகுநேரமாகியும் போனை எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன அவர் இது குறித்து மற்றொரு நண்பரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த நபர் ஜேஜி வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அங்கு கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து காவல்துறைகு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

jakijon1 - 2026

அங்கு வீட்டு சமையலறையில் ஜேஜி சடலமாக கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஜேஜி தற்கொலை செய்து கொண்டுள்ளாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சமூக வலைத் தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் கடைசியாக் தனது பேஸ்புக் பக்கத்தில் 2019 ல் நீங்கள் அழுத கண்ணீர் 2020ல் நடவு செய்யும் விதைகளுக்கு தண்ணீர் ஊற்றட்டும் என் று பதிவிட்டிருக்கிறார்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.