செப்டம்பர் 1 முதல் எதற்கெல்லாம் அனுமதி..! தமிழக அரசு!

Published:

tn-cm

தமிழகத்தில் செப்டம்பர் 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது நாளை வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று தெரிவித்தது. பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.

மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

மேலும், செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது மத்திய அரசு.குறிப்பாக அரசின் உத்தரவு இல்லாமல் எந்த மாநிலங்களும் ஊரடங்கை அறிவிக்க கூடாது எனவும் மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் தான் நாளையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று காலை முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

பின் மருத்துவ நிபுணர் குழுவுடன் மாலை முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டார் .இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 30 -ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் தமிழகத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தீபா தேவையில்லை என்றும் பிற மாநிலங்களில் இருந்து வருவதற்கும் ரயில் பேருந்து விமானம் மற்றும் மற்ற வாகனங்களில் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு அதே முறை தொடரும். அலைபேசி எண் ஆதார் எண் போன்றவற்றுடன் இ பாஸ் விண்ணப்பம் செய்பவர்களுக்கு உடனே இ பாஸ் வழங்கப்படும்

அனைத்து வழிபாட்டு தலஙகளிலும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. பொதுமக்கள் தரிசனம் வழிபாட்டு தலங்களை இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் இதற்கான முழு நெறிமுறைகளும் பின்னர் அறிவிக்கப்படும் எத்தனை நபர்கள் உள்ளே செல்லலாம் என்பது குறித்தான நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.

மாவட்டத்திற்குள்ளும் சென்னை பெருநகர போக்குவரத்து சேவை தனியார் மற்றும் அரசு போக்குவரத்து நிலையான நெறிமுறைகளின் அடிப்படையில் 19 1 2020 முதல் அனுமதிக்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் போக்குவரத்து 7 9 2020 முதல் நிலையான நெறிமுறைகள் உடன் அனுமதிக்கப்படுகிறது

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

வணிக வளாகங்கள் மற்றும் ஷோரூம்கள் பெரிய கடைகள் நூறு சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது குளிர்சாதன வசதியுடன் இயங்கும் வணிகங்கள் மத்திய அரசின் நெறிமுறைகளை பின்பற்றி நிலையான நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப் படுகிறது வளாகத்தில் இருக்கும் திரையரங்குகளுக்கு அனுமதி கிடையாது அதே நிலை தொடரும்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் 8 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுகிறது.

அரசால் வெளியிடப்பட்ட நிலையான நெறிமுறைகளை பின்பற்றி தேனீர் கடைகள் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுகிறது பார்சல் 9 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுகிறது

சென்னை உட்பட தமிழ்நாட்டு தொழிற்சாலைகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது மேலும் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் முக்கியமான பணியாளர்களை மட்டும் கொண்டு இயங்கவும் மீதி உள்ளவர்கள் வீட்டில் இருந்து இயங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

தங்கும் விடுதிகள், ஹோட்டல், ரிசார்ட், கேளிக்கை விடுதிகள் பிற விருந்தோம்பல் சேவைகள், நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது

உடற்பயிற்சி மைதானங்கள் விளையாட்டு பயிற்சி மையங்கள் தொடங்க அனுமதிக்கப்படுகிறது ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

திறன் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 21 9 2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப் படுகிறது மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு கொரோனா பாதுகாப்பு அதிகாரியை நியமித்து தொற்று உள்ளவர்களை பரிசோதிக்கவும் தனிமைப்படுத்தவும் வருபவர்களை பரிசோதனை செய்து அனுப்பவும் முறையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் அனுமதிக்கப்படுகின்றது

நீலகிரி கொடைக்கானல் போன்ற மலை வாழ் தலங்ககுக்கு செல்வதற்கு நோய்த்தொற்றை தடுப்பதற்காக நீட் பாஸ் எடுத்து செல்லும் முறையை பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது.

திரைப்பட தொழில் நுட்ப படப்பிடிப்பு பணிகளுக்கு 75 நபர்களுக்கு மிகாமல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணி செய்ய அனுமதிக்கப்படுகிறது

ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.

sep lockdown 1 - 2026
sep lockdown - 2026
cm permission - 2026

Related articles

Recent articles

spot_img