ரிசர்வ் செய்த டிக்கெட்.. உங்களுக்கு பதில் மற்றொருவர் பயணம்!

Published:

train 2 - 2026

உங்களிடம் உறுதிசெய்யப்பட்ட ரயில் முன்பதிவு டிக்கெட் உள்ள நிலையில், தவிர்க்க முடியாத ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களால் பயணம் செய்ய முடியவில்லை என்றாலோ, உங்களுக்கு பதிலாக உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலோ, உங்களது டிக்கெட்டை அவர் பெயரில் மாற்ற ரயில்வே அனுமதிக்கிறது.

இதற்கான சிறப்பு வசதியை ரயில்வே வழங்கியுள்ளது. இந்திய ரயில்வேயின் இந்த சிறப்பு வசதியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சில சமயங்களில், ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்த பின் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக புதிய டிக்கெட்டை எடுக்க வேண்டிய அவலநிலையை ரயில்வே பயணிகள் அடிக்கடி எதிர்கொள்கின்றனர்.

ஆனால் கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம். அதனால்தான் பயணிகளுக்கு இந்த வசதியை ரயில்வே வழங்கியுள்ளது. இந்த வசதி நீண்ட காலமாக இருந்து வருகிறது,

ஆனால் அதிகமான பேருக்கு இது பற்றி தெரியவில்லை. ரயில்வேயின் இந்த வசதியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

ஒரு பயணி தனது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன் மற்றும் மனைவி போன்ற அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது நண்பர்கள் என வேறு யாருடைய பெயரிலும் மாற்றலாம்.

இதற்கு, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், பயணிகள் கோரிக்கை விடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, பயணச்சீட்டில் பயணிகளின் பெயர் துண்டிக்கப்பட்டு, யாருடைய பெயரில் டிக்கெட் மாற்றப்பட்டதோ அந்த உறுப்பினரின் பெயர் போடப்படுகிறது.

விண்ணப்பத்தை 24 மணி நேரத்திற்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டும்

பயணி ஒரு அரசு ஊழியராக இருந்து தனது பணிக்காக செல்கிறார் என்றால், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அவர் கோரலாம். இந்த டிக்கெட் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நபரின் பெயருக்கு மாற்றப்படும்.

திருமணத்திற்கு செல்பவர்களுக்கு இது போன்ற நிலை வந்தால், திருமண ஏற்பாடு செய்பவர்கள், 48 மணி நேரத்திற்கு முன், தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வசதியை ஆன்லைனிலும் பெறலாம். இந்த வசதி என்சிசி கேடட்களுக்கும் கிடைக்கும்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

பயணச்சீட்டுகளை மாற்றுவது என்பது ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என்று இந்திய ரயில்வே கூறுகிறது. அதாவது ஒரு பயணி தனது பயணச்சீட்டை வேறொரு நபருக்கு மாற்றியிருந்தால், அதை மீண்டும் மாற்ற முடியாது.

உங்கள் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றும் வழிமுறை:

டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

அருகிலுள்ள ரயில் நிலையத்தின் முன்பதிவு கவுண்டருக்கு செல்லவும்.

டிக்கெட் யாருடைய பெயரில் மாற்றப்பட வேண்டுமோ, அவரது ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற அவரது அடையாளச் சான்று எடுத்துச் செல்ல வேண்டும்.

கவுண்டரில் டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கவும்.

Related articles

Recent articles

spot_img