அன்பு தம்பி ஸ்டாலினுக்கு… கவிப்பேரரசு வைரமுத்து பாலியல் விவகாரத்தில் சிக்கினான் என்பதை அறிந்தேன்… என் பின்னேயே சுற்றி திரிந்தவன்…சிக்காமல் இருந்தால் தான் அதிர்ச்சி அடைந்து இருப்பேன்…
நிற்க ..
பழக்க தோஷத்தில் நீ அவனுக்கு பதில் மன்னிப்பு கேட்க சென்று விடாதே… காக்கா கண்ணன் சிக்கட்டும்… எனக்கு பாராட்டு விழா எடுத்த மேடையில் என் முன் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன்..
அடுத்து நீ மருத்துவமனையில் இருந்த திருமுருகன் காந்தி சிறையில் நக்கீரன், வைகோவை சந்தித்ததை சமாதியில் வைத்த முரசொலி மூலம் அறிந்தேன்…
நீ இது போல தொடர்ந்து கைதிகளுக்கும் நோயாளிகளுக்கும் ஹார்லிக்ஸ் சாத்துகுடி வாங்கி சென்று பார்ப்பதையே வழக்கமாக வைத்திருப்பதை அறிந்து நெஞ்சம் விம்முகிறது….
நமக்கு திமுக என்ற குடும்ப கம்பெனி ஒன்று உள்ளது என்பதை மறந்து விடாதே…
தமிழன் பிரசன்னா என்னை அப்பா என்று இன்னமும் அழைக்கிறானாம்…. சொல்லிவிடு அவனிடம்… .எனக்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உண்டு என…
என்றும் அன்புடன்
மு.க.
– எழுத்துலகில் கிடைத்த கருத்துச் சுதந்திரத்தின் அளவுகோலால் இப்படி அளந்து அளந்து பதிவுகளைப் போட்டிருக்கிறார்கள், கற்பனையில் கெலித்து விட்ட கவிப்பேரரசுகள்! சமூக வலைத் தளங்களில் அலை அலையாக கருத்துக்கள் இப்படி பொங்கிப் பிரவாகமெடுத்து வருகின்றன. அவற்றில் ஒரு கருத்துதான் இது..!




